Friday, October 15, 2010

உயிர் இழந்தோம் உடல் இழந்தோம்
உணர்வுகளின் வெப்பத்தில் உறவுகளை எரித்து வந்தோம்
நிழல் இழந்தோம் நிஜம் இழந்தோம்
நினைவுகளின் பொதி சும்தந்து நீண்ட தூரம் நடந்து வந்தோம்
துயில் இழந்தோம் துகில் இழந்தோம்
துடுப்புகள் எதுவுமின்றி பெருங்கடலை கடந்து வந்தோம்
இனம் இழந்தோம் தினம் இழந்தோம்
இனி இழக்க எதுவுமின்றி பிழைதிடவே ஓடி வந்தோம்
உடல் சுமக்கும் மண்ணின் பாரம்
இழக்கும் வரையில் தெரிவதில்லை
உயிர் சுமக்கும் உடலின் பாரம்
இறக்கும் வரையில் குறைவதில்லை
நினைத்திருப்போம் தாய்மண்ணை துதித்திருப்போம்
மீண்டும் சென்று சேரும் வரை
விழித்திருப்போம் இறுதிவரை உயிர்திருப்போம்
விடியல் ஒன்று தோன்றும் வரை
அடக்கி வைத்தோம் கடமை என சிரித்து வைத்தோம்
பிழைத்திருப்பது அந்நிய நாட்டில்
விதைத்து வைத்தோம் கோபத்தை எழுதி வைத்தோம்
எம் தாய்மொழி தந்த பாட்டில் ....

No comments:

Post a Comment