Monday, October 18, 2010

விரலிடையே இடம் பிடித்தாய்

இதழ் தடவி உடல் எரித்தாய்

தனிமைகளை நீ நிறைத்தாய்

தவணைகளில் உயிர் பிரித்தாய்

மறந்திடவோ மனமுமில்லை

துறந்திடவோ துணிவுமில்லை

இருந்தும் உதறிடவே முடிவெடுத்தேன்

நம் உறவு ரத்தை பதிவு செய்தேன்

நுனி சிவக்கும் உன் அழகு கோபம்

இனி ரசிக்க ஆசை இல்லை

சுருட்டுகளின் தங்க ராஜா

இனி உனக்கு இங்கு வேலை இல்லை

Friday, October 15, 2010

உன்னை
விட அழகான கவிதை
எழுத முயற்சித்து
தோற்று போன
விநாடி முதல்
...உன்னை
காதலிக்க தொடங்கினேன் :-)

ஒவ்வொரு முறை உன்னிடம்
தோற்கும்போதெல்லாம் சிரிக்கும் பெண்ணே

எப்போது தெரிந்து கொள்வாய்
நீ சிரிக்கும்போதெல்லாம் நான்
...ஜெயிக்கிறேன் என்பதை

உன் பெயரின் எழுத்துக்களை

மாற்றி மாற்றி என் பெயர்

கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம்
...
அது காதல் என்றே முடிந்து தொலைகிறது

நிசப்தமான இரவு நீ
உறங்குவதற்காக படைக்க பட்டது
வெளிச்சமான விடியல்
நான் உன்னை பார்பதற்காக படைக்க பட்டது
ஆதலால் ஆதிபகவன் மற்றும் அவள் முதற்றே உலகு :-)

இலக்கணம் பயின்று அளபெடை அறிந்து
மாத்திரை கணித்து மெல்லினம் பிரித்து
ஓயாமல் சலித்ததில் மிச்சமிருந்த
அழகிய தமிழ் வார்த்தை நீ
உன் பெயரேச்சமென நான்

உயிர் இழந்தோம் உடல் இழந்தோம்
உணர்வுகளின் வெப்பத்தில் உறவுகளை எரித்து வந்தோம்
நிழல் இழந்தோம் நிஜம் இழந்தோம்
நினைவுகளின் பொதி சும்தந்து நீண்ட தூரம் நடந்து வந்தோம்
துயில் இழந்தோம் துகில் இழந்தோம்
துடுப்புகள் எதுவுமின்றி பெருங்கடலை கடந்து வந்தோம்
இனம் இழந்தோம் தினம் இழந்தோம்
இனி இழக்க எதுவுமின்றி பிழைதிடவே ஓடி வந்தோம்
உடல் சுமக்கும் மண்ணின் பாரம்
இழக்கும் வரையில் தெரிவதில்லை
உயிர் சுமக்கும் உடலின் பாரம்
இறக்கும் வரையில் குறைவதில்லை
நினைத்திருப்போம் தாய்மண்ணை துதித்திருப்போம்
மீண்டும் சென்று சேரும் வரை
விழித்திருப்போம் இறுதிவரை உயிர்திருப்போம்
விடியல் ஒன்று தோன்றும் வரை
அடக்கி வைத்தோம் கடமை என சிரித்து வைத்தோம்
பிழைத்திருப்பது அந்நிய நாட்டில்
விதைத்து வைத்தோம் கோபத்தை எழுதி வைத்தோம்
எம் தாய்மொழி தந்த பாட்டில் ....